முதல் துளி

பலத்த சூறைக் காற்று
பச்சை இலை உதிர
பாப்போர் மிரள
மண் புலுதி பறக்க
மரகிளைகளின் களியாட்டம்

விஞ்ஞானத்துடன் கூட துணிந்து
வெளிவரா மக்கள் !
காற்றுடன் ஏற்ப்பட்ட மோதலில்
கலவரமானது மனது
மழைத்துளி இன்னும் விழவில்லை

ஈரக்காற்று என்மேல் பட
இன்பமானது மனது
கருமேகங்களின் போர்வையில் வின்வெளியே
என்கண் ஒளியிளிருந்து மறைந்துவிட
பாதை ஒன்றும் புலப்படவில்லை

பாதிவழியில் நான்
திரும்பிச் சென்றால்
வழி தீரப்போவதில்லை
விலகிச் செல்லவோ
இன்னும் வேலைவரவில்லை

என் பாதையின் முடிவை
பார்த்தோர் எவருமில்லை
எங்கு தொடங்கினேன்
எனக்கே நினைவில்லை

எங்கு இருக்கிறேன்?
எதை நோக்கிப் போகிறேன்?
ஏனிந்த ஆசை?, ஏனிந்த கோவம்?
முதல் துளி என்மேல் விழ!!!
பயணம் மறந்தேன் பரவசமானேன்

எழுதியவர் : க. சம்பத்குமார் - உடுமலை (6-Jun-12, 5:44 pm)
பார்வை : 275

மேலே