சே குவேரா ஒரு மாமனிதன் (கவிதை திருவிழா)
முதலாளிக்கு பிறந்தவன் நீ!
ஏழையின் நண்பனாய் வளர்ந்தவன் நீ!
உன் வாழ்வின்
திசை மாற்றியதொரு பயணம்!
தென் அமெரிக்காவை
புரட்டிப்போட்டது
உன் வாழ்கை பயணம்!
ஏழை சிந்திய ரத்தம்
கண்டு
கொதிதாய் -நீ
புரட்சியை கையில் எடுத்தாய்!
ஃபிடல் காஸ்ட்ரோ கண்டெடுத்த
மாணிக்கம் நீ
அர்ஜென்டினாவின் சிங்கம் நீ!
எவனுக்கும் அஞ்சாத தங்கம் நீ!
யாதும் ஊரே! யாவரும் கேளீர்! -என
எங்கோ பிறந்து -நீ
உழைத்தாய் உலகுக்கு!
சர்க்கரை இனிக்கவில்லை
ஏழைகளின் கண்ணீரால்!
சர்க்கரை கிண்ணம் கியூபா
உன் பாதம்பட்டு
இனித்தது தேனாய்!
அடைந்தது விடுதலை!
காங்கோ,பொலிவியா
என உன் வெற்றிச் சரித்திரம்
நீளம் தான்!
குளிக்காத அழுக்கன்- நீ
வெள்ளந்தி மனத்தவன்!
துவைக்காத துணிக்குள் வசிக்கும்
உலகை துவைக்கும் சோப்பு நீ!
ஏகாதிபத்தியம் என்ற எமன்
அமரிக்கா வடிவில்
உன்னை துரத்த - நீ
உடல் துறந்தாய்
உலக இளைங்கர்களின்
உயிரில் கலந்தாய்!
உன்னை கொன்றவன்
உன் உருவத்தை
காட்டி எடுக்கிறான் பிச்சை!
நீ ஒரு அட்சய பாத்திரம்
என்று தெரியாமல்!