அன்னையின் அன்பு
கண்களில் கதைகள் சொன்னவளே ...
புவி பெண்களில் சிறந்தவள் நீ என்பேன் ....
முதல் முதலாய் என்னை தொட்டவளே ...
எந்தன் முகம் பார்த்து உயிர் பெற்றவளே ...
என் காலாலே உன்னை எட்டி உதைத்தும் ...
எந்தன் கரம் பிடித்து என்னை கட்டி அணைத்தாய் ...
முகம் எங்கும் நீ முத்தமிட்டாய் ...
ச்சீ... எச்சில் என்று நான் தட்டி விட்டேன் ...
தொட்டில் கட்டி தாலாட்டி ...
தாகம் தீர பாலூட்டி ...
தேனும் பழமும் கலந்தளித்து...
தேகம் வளர வழி செய்தாய் ...
இளைப்பாற மடி கொடுத்து ....
இசை பாடி உறங்க வைத்தாய் ....
நான் துடித்தால் நீ அழுதாய் ...
நீ அழுதால் நான் துடிப்பேன் ....
வெயில்லினிலே வேர்த்த எனக்கு ...
கைகளாலே காற்றடிதாய் ....
கண் கலங்கி நான் நிற்க ,
காற்றை கையில் பிடித்து வைப்பாய்
தூசி விழ கூடாதென்று ...
மழை துளியில் நான் நனைந்தால் ,
மரமாகி குடை பிடிப்பாய் ....
பத்து மாதம் என்னை சுமந்தெடுதாய் ...
செத்து போகும் வரை உன்னை சுமந்திருப்பேன் ...
என்னை உயிர் எழுத்து எழுத வைத்தாய் ...
உந்தன் உயிராக நான் இருப்பேன் ....
நிலா சோறு ஊட்டி விட்டாய் ...
உந்தன் நிழலாக நான் இருப்பேன் ...
ஆலயங்கள் அழைத்து சென்றாய் ,
அம்மன் தானென்று தெரியாதவளே ....
பள்ளிக்கூடம் கண்டதில்லை நீ ,
என்னை படிப்படியாய் படிக்க வைத்தாய் ...
படிப்பறிவு ஏதும் இல்லை உனக்கு ,
என்னை பக்குவமாய் பார்த்துக்கொண்டாய் ...
எட்டாத வானுக்கும் ஏணி வைத்து ,
ஏழு வண்ண வானவில்லை எட்டிப்பிடித்து ,
சூடான சூரியனை பேனாவாக்கி ...
வெள்ளை நிற வெண்ணிலவே மையாக ...
பால் வீதியில் படலமைப்பேன் ...
என் அன்னையின் அன்பை பற்றி ....