தேவை ஒரு விவசாயப் புரட்சி (கவிதைத் திருவிழா )

என் மானிட சமூகமே
ஒரு நிமிடம் சிந்தி,
ஆம்! விவசாயிப் பற்றி சிந்தி .....
ஒவொரு விவசாயியும்
தெய்வத்தின் தூதன்,
அவன் உறக்கத்தில் கூட
உழுதுகொண்டு இருப்பவன்!
வானம் பொய்த்தாலும்
வர்ணபஹவானிடம் நீதிகேட்க
ஒருபோதும் மண்டியிடமாட்டான்!
பதிலுக்கு அவனுடைய
ஓயாத உழைப்பாலே
வர்ணபஹவானின் ஆருயிர்
காதலியை கரம் பிடிப்பான்.
தன் வயிறு காயிந்தாலும்
பிறர் வயிறு செழிக்கப் போராடுபவன்.
எந்த விவசாயும் ஏமாற்றுபவன் அல்ல.
பதிலுக்கு ஏமாறுபவன்.
படித்த பரிதரசிகள் பலர்
அரசாங்க ஊழியர்களாக இருந்துகொண்டு
அசிங்கமே இல்லாமல் அரக்கர்களாக
கைநாட்டு விவசாயிடம்கூட
கையேந்தி பிச்சைக் கேட்க்கின்றார்கள்.
லஞ்சமாக!
விவசாயின் துயரத்தை
துச்சமாக கருதி லஞ்சம்வாங்கும்
இதயம் செத்த இந்த சாத்தான்களுக்கு
நரகத்தில் தூக்கு கயிறு
தொங்குவது தெரியாது போலும் .
பாவம் அந்த கோமாளிகளுக்கு
பணமிருந்தால் போதும்
சாக்கடையைகூட குடிப்பார்கள்...
எவன் விவசாயியை
அவமதிக்கின்றானோ அவன்
இந்த தேசத்தின் துரோகி!
சோற்றில் கைவைக்கும்போது
ஒருநாளேனும் விவசாயிக்காக
வணங்காதவன் இதயம் செத்த நடைப்பிணம்>>>>
சாதாரண தண்ணீர்க்காக
பந்தாவாகப் பணத்தை
எடுத்து நீட்டும் கோமாளிகள்
இரவு பகலாக பசுவை பராமறித்து
பாலைவாற்கும் விவசாயிக்கு
பத்து பைசா உயர்த்தித்தர
உயிரைவிட்டு கூப்பாடு போடுகின்றார்கள் .
ஒ! விவசாயியே
நீ ஏமாளியாக இருக்கும்வரை
உன்னை ஏமாற்ற அரசியல் வர்க்கமும்
அதிகார வர்க்கமும்
உன்னை சுரண்டத்தான் செய்வார்கள்!!!!
ஐயகோ! அவலம்.. அவலம்..
பொருத்தது போதும்!!
இனியும் நீ ஏமாந்தால்
உந்தன் பிள்ளைகளின் மரணத்தின்
அழுகுரல் தான் உன் இதயத்தில் எதிரொலிக்கும்.
இனியாவது போராடத் துணி.
புரட்சி என்ற எழுத்தை உச்சரிகவாவது செய் .
உந்தன் உழைப்புக்கு தெய்வம் தலைவணங்கும்!!
ஆனால்,இந்த சமூகம் தலைவணங்காது .
அது நிஜம்!! நீ இனியும் போராட தயங்கினால்
நீதி தேவதைகூட
உன்மீது கோபம் கொள்வாள்.
இனி புரட்சி என்ற முழக்கமே
உன்னை பாதுகாக்கும்.
இனி எந்த சட்டமும்
எந்த அரசாங்கமும் உன்னை
ஒருபோதும் பாதுகாக்காது
உந்தன் ஈனக்குரல் அதிகாரவெறியர்களுக்கு
தெமாங்காய் ஒலிக்கும்.
ஆம்! சூராவெளியாய் அவர்களை தாக்க
நீ புரட்சி புரட்சி என முழங்கு!!!
உந்தன் மூச்சிகாற்று அக்னியென
திக்கெங்கும் வீசட்டும் .
உன்னிடம் தான் நாட்டின் அச்சாணியே உள்ளது.
உன்னை முதலில் அறி!!!
உண்பலத்தை அறிந்து துணிந்து நில் .
அச்சாணி இல்லா வண்டி ஓடாது.
விவசாயியே நீ இல்லாமல்
இந்த உலக சக்கரத்தின் அச்சாணி நீதான்
ஆம்! அது தான் உந்தன் பலம்.
உந்தன் பலத்தை உணர்.
உன்னிடம் சீற்றம் இல்லாதவரை
சீர்திருத்தம் கனவிலும் வராது!!
சீற்றம் இருக்கும்இடத்தில்தான் சீர்திருத்தம் வரும்
புரட்சி இருக்கும் இடத்தில்தான் புதுமைஉண்டாகும்
எழுச்சி இருக்கும் இடத்தில்தான் ஏற்றம் இருக்கும்
மாற்றம் இருக்கும் இடமே மகிழ்ச்சி கூத்தாடும் !!!
இதை முதலில் உணர் ....
விவசாயியே வீர முழக்கமிடு
விண்ணதிரும்வரை முழங்கு!!!
உந்தன் முழக்கம் இடியாய்
விழட்டும் ஆள்வோர் இதயத்தில் !!!
அந்த இடித்தான் உந்தன்
ஏக்கத்திற்கு கல்லறை கட்டும்!!
ஆம் உந்தன் ஏழ்மைக்கும் கல்லறை கட்டும்....
வந்தே மாதிரம்!! ஜெயஹிந்த்!!!

எழுதியவர் : எம்.எஸ்.சாஸ்திரி (7-Jun-12, 12:14 pm)
பார்வை : 231

மேலே