ஒரு காதல் இரு குரல்கள் !

நீயும் நானும்
நடத்திய
காதல் நாடகத்தில்
நான் இரசித்த வசனம்:
"நான் உங்களைக்
காதலிக்கிறேன் !"
என்று நீ சொன்னது

நான் இன்னும்
இரகசியம் காக்கும் வசனம் :
"எனது மகனுக்கு
உங்கள் பெயரைத்தான்
வைப்பேன்!"
அதுவும் நீதான் சொன்னது !

எழுதியவர் : முத்து நாடன் (7-Jun-12, 10:54 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 173

மேலே