களை கட்டும் காதல் கச்சேரி !

உன் அழகான
பார்வை
இராகம் என்றால்
உன் செம்பொன்
கால் விரலின்
மருதாணிப் பூச்சுதான்
தாள லயம்!

இரண்டும்
ஒன்றோடு ஒன்றாய்க்
கலந்தபிறகுதான்
இதய அரங்கில்
களை கட்டுகிறது
நம் காதல் கச்சேரி !

எழுதியவர் : முத்து நாடன் (7-Jun-12, 10:49 am)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 197

மேலே