நீ இன்னும் வளரனும் தம்பி ...
நண்பனைப் பார்க்க சென்றிருந்தேன் ...
புதிதாக கைப்பேசி வாங்க என்னிடம் யோசனை கேட்டான் ...
நானும் , குரலை எல்லாம் உயர்த்தி .... "ஆன்ராய்டு கைப்பேசி வாங்கு மச்சா ..." என்றேன் ...
" அதில் எல்லா வசதிகளும் இருக்குமா " என்றான் அவன் ?
"எல்லாம் இருக்கும் , கூடுதல் வசதிகள் , மென்பொருள்கள் வேண்டுமெனில் அவை ஆன்ராய்டு சந்தையில் (Android Market ) கிடைக்கும் , அங்கிருந்து பெற்றுக்கொள்ளாம் " என்றேன் நான் ..
"ஏன்டா மச்சா , அந்த சந்தை கோயம்பத்தூரில் எங்கடா இருக்கு " என்றான் அவன் சிறிதும் சிந்திக்காமல் .... :P :P :P :) :) :)
இதில் கூத்து என்னவென்றால் , அவன் தகவல் தொழிநுட்பம் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் ...
இது அல்லவோ சிறந்த கல்வி முறை !!!!
அவன் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லுங்கள் ...