பெண்மகள் பெருமை!
பெண்ணவள் பெருமைதனை
எழுதிடவே
தூவலும் ஆனது
தூங்கா விளக்கே!
அவள் கைத்தலம் பற்றியே
நடந்திடவே பாரினில்
விழையா மனிதரும் உளரோ!
முன்னொடு
சூரியன் உதிக்கும்முன்னே -அவள்
கண்ணொடு
காலை கொணர்ந்திடுவாள்!
விண்ணொடு
நிலவும் தூங்கிடவே -அவள்
பின்னோடு
விழி மூடிடுவாள்!
பொட்டிடை நெற்றியில்
வியர்வை சூடி -அவள்
கட்டிடை களைக்க
வேலை செய்வாள்!
முத்தினை ஒழித்திட்ட
சிப்பி போலே -அவள்
தன்திரு மக்களை பேணிடுவாள்!
துப்பார்க்கு துப்பாய நீரைப்போலே-அவள்
துப்பாக்கி உணவிடுவாள்!
துயிப்பவனாம் தலைவன் தாளே
தானே அவள்
துப்பாகியும் விருந்தளிப்பாள்!
கலைமகள், மலைமகள்
சிலை-அவள்
நிலமகள் போலே
இகழ்வாரைப் பொருத்திடுவாள்!
நெஞ்சினினில்
நீங்கா காதல் கொண்டே -அவள்
பஞ்சினில் செய்திட்ட பூவைப்போலே
பிஞ்சு உள்ளம் கொண்டவள் -அவள்
பூவையம்மா!