வீரபாண்டிய கட்டபொம்மன்
நீர் தான் ஜாக்சன் துரை என்பவரோ ?
\"வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி\".
நெஞ்சை நிமித்தி ,வெள்ளையனை நேர்நிறுத்தி ,
நீர் கேட்ட வீர வார்த்தைகள் !
தன்னலம் பாராத பொது நல வீரனே ,
புண்ணியம் பெற்றோம் நீ பூமியில் பிறந்ததற்கு ,
கோழையாய் வாழும் நூறு ஆண்டுகள் தேவையில்லை ,
வீரனாய் செத்து மடியும் ஒருநாள் போதுமெம்பதை
நீயே உணர்த்தி சென்றவனல்லவா !
சுயநலம் மறந்து
பொதுநலம் போற்றியதால்
நீர் வீழ்ந்தும் வாழ்ந்துகொண்டிருக்கிரீர் !
பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்த
மாமன்னனே ,
பாஞ்சாலம் குருச்சி கண்டெடுத்த
வீர திருமகனே !
வாழ்நாள் சாதனையாலனே ,
அடைமைபட்டவர்களின் துயர் துடைக்க வந்த
தீரனே , வீரனே ,
பகைவர்களை தெறித்தோட செய்த
பாளையகாரனே!
வெள்ளை வெறியர்களின்
வாய்க்கு கடிவாளம் இட்டவனே
அடிமை பட்டவர்களின் அரனே ,
வானம் பார்த்த பூமியிலும்,
வீரம் விளைவித்தனே!
ஆங்கிலேய ஆலந்துரையை
அடித்து விரட்டிய அசாத்தியனே,
கப்பம் கேட்டவர்களின் மண்டையை உடைத்த
மாவீரனே !
வீரத்தின் சிங்கமே
வீரபாண்டிய கட்டபொம்மனே,
சில நரிகளால் அல்லவா
நீர் காட்டிகொடுக்கப்பட்டாய் ,
எட்டயபுரம் பாலயக்கரர்களின் ,
துரோகம் தானே உன் வீரத்தை கொன்றது !
கொள்ளையடித்த வெள்ளையர்கள்
நீ கொள்ளையடிப்பவனாக குற்றம் சாற்ற ,
மக்களுக்கு அரசனான நீ ,
ஆங்கிலேயனுக்கு எதிரியானாய் !
பீரங்கி குண்டுகள் கோட்டையை தாக்க ,
உயிர் பிழைக்க இடம் பெயர்ந்தாய் ,
அக்கரமகாரர்களின் சூழ்ச்சியில் நீ
விஜய ரகுமானின் படைகள் உன்னை கைப்பற்ற
விலங்கு போடவந்தது வெள்ளைக்கார விலங்குகள் ,
உயிர் பிச்சை கேட்காமல்
ஒரு தேசபக்தனுக்குரிய கம்பீரத்தோடு
குற்றங்களை ஏற்கிறாய் ,
இறுதியாய் ,
கயத்தாறு உன் கழுத்துக்கு குறிவைத்தது,
நீர் விட்டுக்கொண்டிருந்த வீர மூச்சு ,
அன்றோடு விடை பெறுகிறது !
இன்று மட்டுமல்ல
என்றுமே நீர் வரலாறு போற்றும் வீரன் ,
அன்று நீ ஆங்கிலேய அதிகாரத்தை
எதிர்த்து போரிட்டாய்,
இன்று நாங்கள் அரசியல் அதிகாரத்தை எதிர்த்து போரிடுகிறோம் !