தேவை ஒரு விவசாயப் புரட்சி ...(கவிதைத் திருவிழா )

தேவை ஒரு விவசாயப் புரட்சி !

இந்த வார்த்தையைக் கூடச்
சொல்லிட எனக்குத் துப்பில்லை !

ஆம் !
தன் குருதியை வியர்வையாக்கி
குருத்தெலும்பு முறிய ,

குண்டியைப் பிடித்துக்கொண்டு
நாளும் அயராது உழுது !

உழைப்பை கலப்பைக்குள் பூட்டி,
பசியை ஈரத்துணியால்
வயிற்றில் கட்டி அடக்கி !

மாடுகளோடு மாடுகளாய் !
மனிதர்களுக்குச் சோறு போட !

நாளும் மன்றாடும் இவனைப் பற்றி
சொல்லிட எனக்குத் தகுதிகள் இல்லை !

ஆம்!
மட்டைப் பந்து போட்டிகளிலும் ,
மாவாட்டும் அரசியல் கூட்டங்களிலும் ,

என்ன முடியாத் தலைகள் இருக்குமே ,
அதில் தென்படும் முதல் தலை என் தலையே !

புதிய திரைப்படத்தின் முதல் காட்சிக்கு !
ஆயிரம் பேர்கொண்ட நீண்ட வரிசையில் ....

ஆராவாரம் செய்தவாறு நிற்கும்
நபர்களில் நானும் ஒருவன் !

காதல் என்று சொல்லிக்கொண்டு
மாது பின் சுற்றியும் .....

பின் , கவலை எனக் கூறிக்கொண்டு,
மதுக்கடைகள் முன் குவியும் ....
வாலிபர்களில் நானும் ஒருவன் !

இங்கே பிறந்து ....
இங்கே வளர்ந்து ....

இங்கே அறிவில் முதிர்ந்து ....
அயல்நாடு சென்று .....

தன் அறிவை அறுவடை செய்யும்
அறிவாளிகளில் நானும் ஒருவன் !

நான் வேறு யாருமல்ல !

இந்தியாவின் எதிர்காலத் தூண்கள் என்றும் !
இந்தியாவை வல்லரசாக்கும்வாலிபர்கள் என்றும் !

அப்துல்கலாம் முதற்கொண்டு
ஆன்றோர்கள் பலரால் .....
நம்பிக்கை வைத்திருக்கும் ,

அவர்களின் நம்பிக்கை கெடுக்கும்
இந்நாள் இந்தியன்!

இப்போது கூறுங்கள் ....
விவசாயத்தைப் பற்றி .....

நம்மில் எத்தனை பேருக்கு
விவரமாய்த் தெரியுமென்று ?

நண்பர்களே .....
வரிகளில் எதுகை , மோனை ,
அமைப்பதால் மட்டுமே ......

வறிய உழவனின், வறுமைக் கொடுமையைச்
சொல்லிவிடல் முடியாது !

ஆம் !
இங்கே சோறு போடுபவன்
தற்கொலை செய்து கொள்கிறான் !

இங்கே ஆடை கொடுப்பவன்
அரை நிர்வாணமாய் தவிக்கின்றான்

இங்கே சத்தான காய் ,கனிகளைக் கொடுப்பவன்
சொத்தைகளைத் தின்றே செத்துப் போகிறான் !

முதலில் இளைஞர்களே
நாம் மாற வேண்டும் !

அழிந்து கொண்டிருக்கும் விவசாயம் காக்க ,
அனைவரும் விவசாயக் கல்வி காண வேண்டும் !

ஆதி விவசாயத்தில் ,அறிவியலைப் புகுத்தி ,
அற்புத விளைச்சல் காண முயல வேண்டும் !

வாருங்கள் தோழர்களே !
போனது போகட்டும் !

இருப்பதைக் காக்க , இனியாவது ,
நாம் அனைவரும் ஓன்று கூடுவோம் !

நம் அறிவால் ஆதி உலவை
ஐநா வரை கொண்டு செல்வோம் !

அனைத்து நாடுகளின் கவனத்தை
நம் அரசின் உதவியுடன்
நம் மீது ஈர்ப்போம்!

நம் நாடு விவசாயத்தில் சிறக்க
வியன்மிகு திட்டங்களை
அவர்களிடம் பெறுவோம் !

வீட்டுக்கொரு இளைஞன் வேண்டாம் !
வீதிகொரு இளைஞன் வேண்டாம் !

ஊருக்கொரு படித்த
இளைஞன் போதும் !

நம் உழவுத் தொழிலை ....
இந்த உலகின் தொழிலாக மாற்ற !

நமது இந்தப் புரட்சியின் மூலம்,
இந்தியாவில் இனி வறட்சி என்ற வார்த்தையே
இல்லாது செய்வோம் !

நம் அறிவியல் முதிர்ச்சி மூலம் ,.
விவசாய வளர்ச்சியில் .....

விண்ணையும் முட்டி !
மக்களைக் காத்து !
மகிழ்ச்சி கொள்வோம் !

வாருங்கள் தோழர்களே !
வாருங்கள் !
வாஞ்சையுடன் ...
நான் ......

எழுதியவர் : ப.ராஜேஷ் (11-Jun-12, 2:31 pm)
பார்வை : 385

மேலே