உண்மை தானே

வாழ்க்கை ஒரு வர்ணனை
ருசித்தவன் வர்ணிக்கிறான்
பசித்தவன் உழலுகிறான்

சோகத்தைப் பரிமாறியும்
சோர்ந்து விடாதவர்கள்
பாதிக்கப்படாதவர்கள்

விருதுக்காய் உழைத்தவன் பள்ளத்தில்
வியாபாரத்துக்காய் உழைத்தவன் உயரத்தில்
திரைப்படம் கற்று தரும் பாடம்

உள்வாங்குகிறது கடல்
அவ்வப்போது
மனிதர்களைப் பார்த்து

சத்தியம் சாத்தியபடாதென்று
சாட்சியை தேடுகின்றது
நீதிமன்றம்

அரசியல் வாதிகளின்
அவ்வப்போதைய நடைபயிற்சி
வெளி நடப்பு

எழுதியவர் : அலாவுதீன் (12-Jun-12, 10:19 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 199

மேலே