ஒப்பில்ல உழவு(கவிதைத் திருவிழா! )

பாஸ்பரஸ் மட்டுமல்ல..
கற்கள் மோதினாலும் நெருப்பு பிறக்கும்!
இரண்டு கற்கள் உரசும் போது
உருவான நெருப்புதான்..
உலக விஞ்சானத்தின் முதல் வழித் தடம்!
உழவும்..
உழவனும்.. அப்படித்தான்!
உழவன்..
அழுக்கு புத்திரன் இல்லை!
அவதாரத்தின் அடையாளம்!
நீ
கிழிந்தது என்று தூக்கி எரிகிறாய்..
அவன் அன்னக் கொடியை பறககவிடுகிறான்!
கழனிகள் எல்லாம்
கான்கிரிட் காடுகளாய்..இன்று ..
அன்று..
எட்டு அடுக்கு மாளிகைகள்
அலங்காரமாய்...ஆடம்பரத்தின்
அடையாளமாய் வந்தது ;
பூமி பரப்பில் போக இடம் இல்லாததால்
எட்டு அடுக்கு கட்டிடங்கள் எழுகிறது !
உனக்குத் தெரியுமா?
உழவன் சேற்றில் கால் வைத்தால் தான்
சோற்றில் நாம் கை வைக்க முடியும்;
விதைகளை
நிலத்தில் விதிக்கலாம்..
நெருப்பில் வேண்டாமே..
எய்ந்திரந்களால் இவர்கள்
இற்று போகச் செய்யலாம்..
முற்று புள்ளி வைக்க முடியாது!
நிச்சயம் ஒருநாள்..
'டை' கட்டியவனும்
இவன் முன்னே
'கை'ஏந்தி நிற்பான்!
புதுமை என்பதே
பழமையின் திருந்திய வடிவம்தான்!
தெரிந்துகொள்..
பழமையில் புதுமை சேர்க்கலாம்!
பழமையின் பாதைகள் அழிந்துபோகாது என்று!
நீ தொலைத்தாய் எண்ணுகிறாய்..
விதைகளோ
விருட்சமாய் எழுகிறது!
மண்ணாக நீ இருந்தாலும்
தின்ன ஒரு அரசி வேண்டும்!
கற்றும்..
நெருப்பும்..
கண்ணுக்கு தெரியாத அந்த கடவுளும்..
என்றும் எப்போதும் இருப்பதுபோல்..
உனக்கு சோறு போடும் உழவனும்...
எபோதும் இருப்பன்..! இருந்துகொண்டே இருப்பான்!
ஒரு வேளை..
உழவன் வேலை நிறுத்தம் செய்தால்
நீ மட்டுமல்ல,
உன்னை படைத்த இறைவனும் பசியால் துடிப்பான்!
கடவுள்
கண்ணுக்கு தெரிய மாட்டான்!
உழவன்
உன்னோடு வாழ்கிறான்!
கண்ணுக்கு தெரியாத கடவுளைவிட,
தெரிபவனை வாழ்த்தினால் தப்பில்லையே?