அவளேயென் தோழி !!

பேசாத பலநாட்களில்
பிணமாகத் தானிருந்தேன்,

மூச்சான அவள்பேச்சால்
மீண்டு(ம்) நான்பிறந்தேன்,

விலகிச் சென்றபோது
விட்டுப்போன கண்ணீர்த்துளி,

சிட்டாய் திரும்பியபோது
சிரிக்கிறது கண்ணோரம் !!

புரிந்துகொள் பிரிவே
கூடிய காதலுடன் ஒருத்தி
காத்துக் கொண்டிருப்பாள்
அவளேயென் தோழி !!

எழுதியவர் : கார்த்திக்.எம்.ஆர் (17-Jun-12, 10:09 pm)
பார்வை : 485

மேலே