பசுமைப்புரட்சி 8 (கவிதை திருவிழா)

அமெரிக்க என்றதும் நினைவுக்கு வருவது
அதன் அதிகார பலம்
ஆப்பிரிக்கா என்றதும் நினைவுக்கு வருவது
அதன் இயற்க்கை வளம்
ஜப்பான் என்றதும் நினைவுக்கு வருவது
அதன் அயராத உழைப்பு
ஆனால்
இந்தியா என்றதும் உலகில் எல்லோர்க்கும்
நினைவுக்கு வருவது அதன்
கிராம சமுதாயம், எளிமையான வாழ்க்கைமுறை
அமைதியான சுழல ,விவசாய பெருங்குடிகள்
கூட்டுகுடும்ப முறை வாழ்க்கை
வந்தவர்களை உபசரிக்கும் மான்புமுறை !

விவசாயம் என்பது அன்றைய
கிராம சமுதாயத்திற்கு வியாபராமாக இல்லை அன்று
அது ஒரு வாழ்க்கை நெறியாக கருதப்பட்டது !

வறுமையும்,பஞ்சமும் வாடியபோதும் - அதை
சமாளித்து வாழும் திறன் இருந்தது .
பாரம்பரிய மரங்கள், ஆலோலம் பாடும்
பறவை இனங்கள், நீரை தாங்கி நிற்கும் குளங்கள்
ஓடைகள் , கண்மாய்கள் , அதில் தாவிக்
குதித்து விளையாடும் இளம் சிறார்கள்
இவை எல்லாம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது .
இவ்வாறு
இருந்த கிராம விவசாயம் ஐம்பதாண்டுகளுக்கு
முன்பு வந்த வேளாண் தொழில் நுட்பம்
அறிமுகமாகி , உரம், பூச்சிமருந்து, புதரக வித்து ,
என மாறி மகசூல் கூடியது உண்மை -
இதனால்
வாழ்க்கை நெறியான விவசாய முறை மாறி
இயற்க்கை வனத்தை எடுக்ககூடிய தொழிலாக
மாறியதால் , சாதாரண விவசாயிகள் தயக்கம் கொண்டனர் .

இதனால்
இரண்டு ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டு - நகரத்தில்
இரண்டு சென்ட் நிலம் வாங்கி போடும்
அவல நிலைக்கு விவசாய குடுபங்கள் தள்ளப்பட்டன

பணப் பொருளாதாரத்திற்கு வாழ்க்கை பட்ட
விவசாயிகள் உழைப்பை என்ற மூலதனத்தை விட்டு
இன்று குறுக்குவழியில் முன்னேற வழியை தேடியது

நமது பாரம்பரிய தானிய வகையான
நெல், சோளம் , கம்பு , கேழ்விரகு, சாமை
ஏறுகட்டிவிட்டு - இன்று
ரேசன் அரிசி சோற்றுக்கு தன்னை
பலக்கபடுத்திக்கொண்டு விட்டது .வீட்டுக்கு வீடு
தொலைக்காட்சி வந்தபடியால் எட்டு மணிக்கே
ஆள்நடமாட்டம் குறைந்துவிட்டது கிராமங்களில்

தேசிய வளர்ச்சியால் கிராமபுரத்தில்
பணப்புழக்கம் அதிகமாகிவிட்டது . இதனால்
கிராம இளைஞர்களுக்கும் குடிபழக்கம்
வெகுவாக பரவிவிட்டது .

சச்சரவு இன்றி வாழ்ந்த கிராமகுடுபங்களிலும் - இன்று
கணவன்,மனைவி சண்டைகளும்
தகப்பன் , மகன் சச்சரவுகளும் கூட
காவல் நிலையம் தேடி வரும்
அவலநிலை உள்ளது ....இன்று !

நேர்மைக்கும்,நாணயத்திற்கும் பேர்பெற்ற
கிராமசமுதாயம் , இன்று சுயநலத்திற்காக ,
யாரையும் ஏமாற்றலாம், யவரையும் கெடுக்கலாம்
என்ற மனோபாவமாக மாறியது காலத்தின் கோலம் .

விவசாய முறைகள் சிதைந்து போனதால்
உழவு மாடுகள் அரிதாகிவிட்டன - இவற்றை இன்று
கண்காட்சியில் காணும் நிலை வந்துவிட்டது !
கொள்கை அரசியல் போய், கொள்ளை அரசியல்
கிராம சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை !
இதனால் ,
கிராம சமுதாயம் தனது குணத்தை இழந்து
சிறப்பு அம்சத்தையும் இழந்து நன்னெறியும் இழந்து
\\\"கிராமத்திற்கே உறிதான\\\"
கடின உழைப்பு , நேர்மை , நல்ல உபசரிப்பு ,
சொந்தபந்தங்களோடு உறவாடும் மாண்பு ,
எல்லாம் அரிதாகி விட்டது ..

இதை பற்றி இப்போதுள்ள தலைமுறைகள்
அக்கறை கொண்டே ஆகவேண்டும் . இல்லையேல்
நாம் நமது முகவரியை இழந்து விடுவோம் !

அரசோ, அரசியல் வாதியோ இதை நெறிபடுத்த
ஏதாவது செய்வார்கள் என்று நம்புவது வீண் !

தேய்ந்து வரும் கிராம பண்பாடுகளை நிலைநிறுத்த
கிராமத்தின் படித்த இளைஞர்கள் ,
வேலைக்கு வெளிஊர் சென்ற கிராமத்தினர் ,
கிராம முன்னேற்ற ஆர்வலர்கள் ,
சமுக நோக்கம் உடையவர்கள் ,
ஜாதி மத பேதமற்ற புரிந்துணர்வு உள்ளவர்கள் ,
கிராமத்தை முன்னேற்ற துடிப்பவர்கள் ,
உந்துணர்வு உள்ளவர்கள் தான் முன்வரவேண்டும் !

மலரில் வந்த செய்தியை
மலர செய்தேன் இப்பகுதியில் .
உங்களுக்காக மீண்டும்.

என்றும் அன்புடன் \\\"நட்புக்காக\\\"
இன்று மட்டும் \\\"பசுமை புரட்சிக்காக\\\"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (18-Jun-12, 9:52 am)
பார்வை : 430

மேலே