உயிரில் கலந்தவளுக்கு
என்னவளே!
எனக்கு உன் உதடுகளை விட என் உதடுகளே அதிகம் பிடிக்கும்,
அது உன் பெயரை உச்சரிக்கும்போது.....
எனக்கு உன் பெயரை விட என் பெயர் அதிகம் பிடிக்கும் அது உன் பெயரை உச்சரிக்கும் போது....
என் உடலில் காயம் தோன்றினால்... உடனே துணியால் கட்டிக்கொள்கிறேன்,
இரத்தம் வெளியேறக்கூடாது என்பதற்காக அல்ல
என் இரத்தத்தில் கலந்திருக்கும் உன் நினைவு வெளியேறக்கூடாது என்பதற்காகத்தான்.........