சந்தோஷமாய்....ஒரு கஷ்டம் .
கருமம்!
இவனை எப்படிக் காதலிக்கத் துவங்கினேன்...
என்று ஆச்சர்யமாய் இருக்கிறது.
எப்போது பார்த்தாலும்...
ஏதாவது பேச்சு.
ஸ்பீல்பேர்க்கில் ஆரம்பித்து....
டென் கம்மண்ட்மேண்ட்ஸ் வரை...
ஏதாவது பேசிக் கொண்டே இருப்பான்.
போதாத நேரத்தில்...
பங்குச் சந்தை...பங்கு போடாத சந்தை
என்று ஏதாவது.
எனக்குப் புரிகிற மாதிரி ஏதாவது சொல்லேண்டா...
என்றால்...
ஒரு கேணச் சிரிப்புடன்...
உனக்கு..வடிவேலுவையும்...
சந்தானத்தையும் விட்டா....
சந்துக்குக் கூடப் போகத் தெரியாது...
யூ...புவர் வில்லேஜ் கேர்ல்
என்று கமென்ட் வேறு.
பதிலுக்கு....
உனக்கு ஒரு முழுக் கத்திரிக்காயை...
பூச்சியில்லாமல் வாங்கத் தெரியுமாடா?...
என்றால்...
சாப்பிடற அயிட்டத்துக்கெல்லாம்.....
ஜாதகம் எதுக்குடி? என்று பதில்.
வாயில்...சூயிங்கம்...
வாராத தலை....
கருப்பு சட்டைக்கு...மஞ்சள் பேன்ட்...
என்று ...
ஏகமாய் பயமுறுத்தும்...
இவனிடம் என்ன பிடிக்கிறதென்று..
எனக்கே தெரியவில்லை.
உன்னைப் பிடிக்கிறது!...
என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லத் தெரியாதவனோடு...
வாழ்க்கையைத் தள்ள....
ஏதாவது வழி இருக்கிறதா?
சொல்லுங்கள்...தோழிகளே!