மலரும் மழலைப்பூக்கள்.......
கொதிக் குமுடலில்
பதிக் குமுத்தம்........
சித்தச்சிறைகளை யுடைத்து
சுதந்திரவானில்
சிறகுகள்விரித்துப் பண்ணிசைபாடும்
பாசப்பறவைகள் சத்தம்......
யார் முத்தம்.....?
சிரிக் குமலரின்
முளைக் கும்பற்க்கள்
கன்னம்கடித் துசிரிக்கும்
மலரும் மழலைப்பூக்கள்......
- A. பிரேம் குமார்
குறிப்பு:
வேலைமுடித்து நண்பருடன் வீடுதிரும்புகையில், நண்பரின் வீட்டுவாசலில் கண்டேன்.......
கடும்வேலையின் கோபத்தோடு வீடுதிரும்பிய தந்தைக்கு, குழந்தை முத்தமிடுகையில், நண்பனின் முகத்தில் சிரிப்பை.
அவன் சிரிப்பை காணும்போது, ஏதோ..., வாழ்க்கையை ஜெயித்துவிட்டவன்போல் சிரிக்கிறான். பிறகு யோசித்துப்பார்க்கையில், பெரியோர் கூறியது நினைவிற்கு வந்தது; சிறு சிறு இன்பங்களால்தான் இவ்வாழ்க்கை எனும் சக்கரம் உருண்டோடுகிறது. இதைத்தான், மனிதன் தேடுகிறான்.