அன்றும் இன்றும் அவள்

காதலியின் மீது கோபம்
இருந்தது
கை கழுவியவள்
என்னை
எச்சில் துணியாய்
துடைத்தெரிந்தபோது

காதலியின் மீது கோபம்
அதிகமானது
அவ்வப்போது
அவள் வரும் கனவிலும்
என் கண்ணீரில்
முகம்பர்த்த போது

காதலியின் மீது கோபம்
வளர்ந்தது
எனக்கானா லட்சிய
வேலை கிடைத்த பிறகு
நீந்தினேன்
அவள் நினைவலைகளில்

காதலியின் மீது
இருந்த
கோபம் குறைந்தது
அவளால் ஒரு
அன்பான மனைவி
கிடைத்தால்

மறந்தே போனேன் அவளை
என் மழலை
செல்வத்தின் சிரிப்பில்
சிரிக்கிறாள்
என் மகள்
ஒவ்வொரு முறை
நான் அழைக்கும்போதும்
என்னை புரிந்துகொண்ட
புன்னகையோடு

அவள் என்னை விட்டு
சென்றால் அன்று
அவளையும் அவள் நினைவுகளையும்
கால் செருப்பாய்
கழற்றிவிட்டு நுழைந்தேன்
என் மனைவின் இதயத்தில்
இன்று

எழுதியவர் : Jagadeeshwaran (2-Jul-12, 5:18 pm)
பார்வை : 269

மேலே