நீர்க்குமிழி!
உன்னால்
கண்ணுக்கு வசமாகிறது
வானவில்!
ஒளியைப் பிரிக்கும் கண்ணாடி
உருண்டை நீ!
ஒரு நொடி
வாழும்
அதிசயம் நீ!
மழலைக்கு நீ
விளையாட்டு!
யாக்கை நிலையாமைக்கு
எடுத்துக்காட்டு!
காற்றுக்கு நீ
சிறை!
உன்னுள் ஒழிந்து தன்னைத்
தொலைக்கிறதே!
காதல் சிறையில் சிக்கித்தவித்து
காற்று
உடைக்கிறது உன்னை!
உடைகிறாய் நீ!
வாழ்க்கையும் நீர்க்குமிழி தானோ?