இந்து மதத்தில் எத்தனை கடவுள் ?

ஒரு முகநூல் பாவனையாளரின் கருத்தொன்றினை பார்த்த பொழுது எனக்கு இந்த கருத்தினை சொல்ல வேண்டும் என தோன்றியது....

அதாவது இந்து மதத்தில் எண்ணிக்கையற்ற கடவுளர் இருப்பதாகவும் எந்த கடவுளை ஏற்றுக்கொள்வது என்று குழப்பமாக இருப்பதாகவும் கேலியாக விமர்சித்திருந்தார்...
இந்து மதம் என்பது மிகவும் தொன்மை வாய்த்த ஒரு மதம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இந்து மத கோவில்களிலும் புராணங்களிலும் சித்தரிக்கப்படும் உருவங்களும் வடிவங்களும் மனிதானால் உருவாக்கப்பட்டது என்பது தான் உண்மை.கடவுளுக்கு உருவம் இல்லை அவன் எந்த வடிவிலும் இருக்கலாம், அவனை எந்த வடிவிலும் பார்க்கலாம்; இதனைச் சொல்வது தான் இந்து மதத்தில் உள்ள இது போன்ற படைப்புக்கள். சில உளவியல் மாற்றங்களையும், உணர்வுகளையும் உருவாக்குவதற்காக பெரியோர்களால் சித்தரிக்கப்பட்ட எண்ணங்களின் வெளிப்பாடுகளே இந்த சிற்பங்கள், வரைபடங்கள் எல்லாம்..!
வெறுமனே உருவங்களையும் சிற்பங்களையும் பார்கப் போகும் மனிதர்களிடையே தான் இது போன்ற அற்பமான எண்ணங்கள் தோன்றும். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் அந்த உருவங்களிலும் சித்திரங்களிலும் உங்களுக்கு பரிமாற்றம் செய்யப்படும் செய்திகளை.அதனை சரியாக புரிந்து கொள்ளும் பக்குவம் வரும் போது நீங்களும் நல்வழிப் படுத்தப்படுவீர்கள்..! இந்து மதத்தையும் அதன் மகிமையும் தெரிந்துக் கொள்வீர்கள்.

மிகவும் இலகுவான வழியில் கடவுளைப் பாருங்கள்...
இந்து மதத்தைப் பற்றி நிறைய விமர்சிக்கப்பட காரணம் சிலரின் மூட நம்பிக்கை தான்.மூட நம்பிக்கைக்கும் இந்து மதம் கூறும் தத்துவங்களுக்கும் எந்த விதத்திலும் தொடர்பில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

பாடசாலையில் படித்த ஒரு செய்யுள் நினைவிருக்கின்றது..இது திருமந்திரம் என நினைக்கின்றேன்.
இது தான் இந்து மதம் சொல்லும் உண்மை.

"உள்ளம் பெரும் கோயில்
ஊணுடம்பு ஆலயம்
தெள்ளத் தெளிந்தாருக்கு
சீவன் சிவலிங்கம்...!"

(இந்த செய்யுள் என்னால் சரியாக சமர்பிக்கப்பட்டதா என தெரியவில்லை.ஆனால் செய்யுள் கூறும் கருத்து சிதைக்கப்படவில்லை என்பதையும் உணர்கின்றேன்)

எழுதியவர் : KS Kalai (6-Jul-12, 11:41 pm)
பார்வை : 560

மேலே