ஆயிரம் ரசனைகள்
அழகு
அன்பு
மகிழ்ச்சி
துயரம்
வருத்தம்
அனுபவம்
ஆவேசம்
அறிவுரை
ஆலோசனை
என
நவரசங்கள் வெளிப்படுத்தும்
பொக்கிஷமாம்
கடிதங்கள் ...!
அலைபேசியும் , இணையமும்
சேர்ந்து நடத்தும் ஆதிக்கத்தின்
வீழ்ச்சிதான் கடிதக்கலை..
வாழ்க்கை யில் எப்போதும்
நிகழும் நிகழ்வில்
இதுவும் ஒரு ரசனையே ...!