போர்...!!!

அமைதியை நிலை நாட்ட
பாரெங்கும் போராட்டம் - இன்னும்
நூறாண்டு தள்ளிப் பார்த்தால்
நிச்சயமாய் அமைதி வரும் - ஆனால்
அது மயான அமைதியாய் இருக்கும்...!!!
காற்றின் பயணத்தைக்
தாமத படுத்தும்
பிண மலைகளைக் கண்டு
பிரமிக்க கூட
ஒரு மனிதனும்
உயிரோடு இருக்க மாட்டான்...!
இருந்தாலும்
ஒன்று மட்டும் உண்மை...
பஞ்சத்தால்
வாடிக்கொண்டிருக்கும்
காக்கைகளும் கழுகுகளும்
பிணம் தின்னி விலங்குகளும் - தம்
ஆயுள் முழுக்க பசியாறலாம்...!
ஆறறிவோடு வந்தவர்கள்
ஆறை ஐந்தாகிக் கொண்டு
சிங்கம் புலி என
பெயர் சூடி நடாத்தும்
அறிவற்ற
செயற்றிட்டம்...!