சுதந்திரம்

வீதிகளில் திரியும்
அரைகுறை ஆடைகள் ,
நாகரீகத்தை நரகமாக்கும்
கலாசார சீரழிவுகள் ,
மேல்நாட்டு கலாச்சாரத்தில்
தலை கீழாய் போன பண்பாடு ,
வாசல் தாண்டாத கால்கள் வானம் தாண்ட ,
விளக்குகளை மட்டும் ஏந்திக் கொண்டிருந்த
கைகள் இன்று மதுக்கோப்பைகளின் மயக்கத்தில் !

குதூகலமான குடும்பவாழ்க்கையில்
அன்நோநியத்தை மறந்து ,
விட்டுக்கொடுத்தல் விதியை மணந்து
நூறு நாள் பயிரை அரைகுறையாய் அலங்கோலபடுத்திவாழவேண்டியவர்களுக்கு
விவாகரத்து கொடுக்கிறது
குடும்ப சுதந்திரம் !

வீட்டுக்கும் , நாட்டுக்கும் அடங்காத
சில இளைஞர்கள் கூட்டம் ,
நீதியை காக்கவேண்டியவர்கள்
அநீதியின் கட்டுப்பாட்டில் ,
கல்வி தேடவேண்டிய வயதில் காதல் தேடல் ,
வேலை தேடவேண்டிய வயதில் சினிமா தேடல் ,
மாலை நேரம் வந்துவிட்டால் மதுவில் தஞ்சம் ,
தடைகள் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறது
இளைஞர்கள் சுதந்திரம் !

போதிக்கவேண்டியவர்கள் ,
அறிவுரைகள் மூலம் உணர்த்துவதை விட்டு
அடி மூலம் உணர்த்தமுடியுமா ,
வித்தை காடும் குரங்குகளா பிள்ளைகள்
பிஞ்சு குழந்தைகளின் உடலில்
பிரம்படி தழும்பு ,
வரம்பு மீறும் ஆசிரியர் சுதந்திரம் !

அந்நியன் ஆண்டான் அடங்கி கிடந்தோம்
நம்மவர் ஆளும் போதும் அடங்கி கிடக்கிறோம் ,
அவர்களுக்கும் இவர்களுக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை ,
இருவருமே சுரண்டல்காரர்கல்தான் ,
இங்கு திருடியதை எங்கோ பதுக்குகிறார்கள் ,
இது அரசியல் சுதந்திரம் !

அரசாங்க ஊதியம்
அதிகார பதவி ,
சொகுசு வாழக்கை ,
வியர்வை இல்லாத வருமானம் ,
போதாத குறைக்கு லஞ்சம் ,
கைநிறைய அரசு கொடுத்தும்
கைநீட்டி கொடுக்காவிட்டால்
அலைக்கழித்து பார்க்கிறது அதிகார சுதந்திரம் !

தனக்கென ஒன்று
பிறர்க்கென்றால் ஒன்று ,
மனிதாபிமானம் மறந்து ,
மனித நேயம் மறந்து
ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொள்ளும் ,
பேச்சு சுதந்திரம் !

ஆளும்கட்சிக்கு ஒரு பத்திரிக்கை ,
எதிர் கட்சிக்கு ஒரு பத்திரிக்கை ,
மாறி மாறி குற்றம் சாட்டும் ,
நல்லவர்களை தீயவர் என்றும் ,
தீயவரை நல்லவரென்றும் ,
மாற்றி பிம்பங்களாக காட்டும்
பத்திரிக்கை சுதந்திரம் !

எழுதியவர் : வினாயகமுருகன் (8-Jul-12, 11:55 pm)
பார்வை : 319

மேலே