பொம்மை பேசும்!

பொம்மை இது பொம்மை
தலை ஆட்டாத
உணர்ச்சி காட்டாத
பொம்மை!

இது பேசும்!
ஏசும் மக்களை
ஏமாற்றும்,
நரியல்ல!
தாளம் தப்பாமல் ஆடும்,
குரங்கல்ல!

உணவுண்ணவேனும் வாய்திறக்குமோ?
ஏழை படும் துயர் கண்டு
மனம் இறங்குமோ?

அம்பானி வீட்டின் அடுப்பங்கரை
பூனையோ?
இல்லை அல்லிராணி கையில்
தவழும் பிள்ளையோ?

பொருளாதாரம் படித்த
பொம்மை - இது
எப்போதும் சொன்னதில்லை
உண்மை!

கூட்டணி ஆட்சியில்
ஆட்டம் காணும்
பொம்மை - இது
வருவோர் போவோருக்கு
சலாம் போடும் பொம்மை!

கொட்டிடும் இது
தானியம் தான் ரோட்டிலே!
கட்டிடக் கோணி இல்லை
என்ற சாக்கிலே!

ஜுரம் வந்த
நாட்டுக்கு
மருந்து வரும்
வெளிநாட்டிலே - என்று
காத்திருக்குது ஜனம்
நடு ரோட்டிலே!

தொங்கும் சட்டசபை உண்டு,
ஆனால்
தூங்கும் சட்டசபை உண்டோ?

(வால்மார்ட்)காரன் வலை
விரிக்கிறான்!
வந்து கடைவிரிக்க
காவு கேட்கிறான்!

விலைவாசி ஏறுது
BP போல!
நம் சம்பளம் மட்டும்
ஏறக்காணோம்!

இருபத்தி ஆறு ரூபாயில்
இந்தியக்குடிமகன்
வறுமைக் கோடு
தாண்ட
அவன் ஒன்றும்
அனுமார் இல்லை!

முதியோர் இல்லம் (நாடாளுமன்றம்)
அப்புரப்படடும்!
மூத்தவர் சொல் கேட்கத்தான்
வேண்டும்!
அவர்கள் வீட்டோடு இருந்து
அதைச்சொல்லட்டும்!

ஒரு வேலை
காந்தி சொல்லாத
நான்காவது குரங்கு இதுதானோ?


PS:
(கொஞ்சம் அதிகம்தான் ஆனாலும் தேவையான ஒன்று!
யாரேனும் படித்துப் புண்பட்டு இருந்தால்
கட்டுச் சோத்தைக் கூட்டத்தில் அவிழ்க்காமல்
தனி விடுகையில் சொல்லவும் LOL)
கவிதை பிறந்த காரணம் இன்றைய "டைம்"
பத்திரிக்கைச் செய்தி!

எழுதியவர் : சரவணா (9-Jul-12, 2:29 am)
சேர்த்தது : ksk2020k
பார்வை : 261

மேலே