வியப்பு

உன் முகம் பார்த்து நிலவுக்கு..
உன் கூந்தல் பார்த்து கார்மேகத்துக்கு..
உன் கண்கள் பார்த்து நட்சத்திரங்களுக்கு..
உன் புன்னகை பார்த்து பூக்களுக்கு..
உன் கையெழுத்தை பார்த்து கவிதைகளுக்கு..
உன் நடையை பார்த்து குழந்தைகளுக்கு..
இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே உன் அழகை கண்டு ஆச்சர்யப்பட்டு போக...
நீ மட்டும் நான் செய்யும் சின்னஞ்சிறு விஷியத்தை கூட கண்டு ஆச்சர்யம் கொள்வது ஏன்..?