வரம் தா..

இன்று நீ ஒரு வரம் தா..

சிலிர்க்க வைக்கிறது- உன் சிரிப்பொலிகள்
எவுகனைகளாய் - உன் கேள்விகள்
இன்னும் வேண்டுமாய்- உன் விதண்டாவாதம்
அகம்பாவம் அழிகிறது -உன் தொனியில்
நிஜம் புரிகிறது- உன் விளக்கத்தில்
மலைக்க வைக்கிறது-உன் சிந்தனை சிதறல்கள்

இதை விட்டு, அதை விட்டு
காலச் சுழலில் எதை கடப்பினும்
இந்த சம்பாஷணைகளை மட்டுமாவது தொடர

இன்று நீ ஒரு வரம் தா...

எழுதியவர் : (12-Jul-12, 7:40 pm)
சேர்த்தது : sas
Tanglish : varam thaa
பார்வை : 205

மேலே