சொல்லிக்கொண்டார்கள்..
வயல் வரப்பில்..
வளைந்தோடும்..சிறு ஓடைக்கரையில் ,
காற்றின் மென் தடவலில்..
என் கற்பனை சிறகுகள் விரிந்த நேரத்தில்..
கைகளை வீசி..
அள்ளி வரும் நீரில்..
துள்ளிக் குதித்து ..
உதடுகள் பிரித்து..
மெல்ல வார்த்தைகள் கசிய..
வானைப் பார்த்து..
பூமியைத் தாண்டி..
பூவை முகர்ந்து ...
உச்சம் தொட்ட கற்பனைகளின்..
மிச்சம் தேடும்
அந்த நேரத்தில்... என்னைப் பார்த்த..
எதிரே வந்த..
பண்ணைவீட்டு மாமாவின் மனைவியும் ,
அடுத்த தெரு கோவிந்தனும்..
ஒரே நேரத்தில் சொல்லிக்கொண்டார்கள்..
பெரிய வீட்டு பிள்ளைக்கு ஏதோ ஆகி போச்சு ...