அழகின் ஆழிப் பேரலை

பார்க்கும் விழிகள் இரண்டும்
பனிமலர் தோட்டம்

காற்றில் மிதக்கும் கூந்தல்
கார் முகில் கூட்டம்

நெஞ்சில் ஏந்தும் இரு நிறைகுடம்
மாறன் எழில் கோட்டம்

இல்லை என்று சொல்லும் இடை
இறைவன் மறைத்த இலக்கியம்

அவள் அசைந்து வரும் நடை அழகோ
அழகின் ஆழிப் பேரலை ஆகும்

---கவின் சாரலன்

கார் முகில் ---கார் காலத்து கரிய மேகம்

மாறன்---மன்மதன் ,காமன்

கோட்டம் ---கோவில் ,ஆலயம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-12, 6:21 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 147

மேலே