நெடுந்தூரப் பயணம்......நினைவெல்லாம் சலனம்.....

ஓலங்கள் ஓய்ந்தன.......

ஆயிரம் ஆயிரம் உறவுகள்........
அவிழ்ந்த மலர்களாய் அங்குமிங்கும்
ஓசையின்றி ஓய்ந்துகிடக்கின்றன......

உடைந்த உள்ளத்தில்
இனியும்துணிவில்லை......
திரும்ப மனமில்லை.....

நடுங்கிய கால்கள்
நடைபோடுகிறது......
நடுக்கம்கண்ட உள்ளம்
உளறுகிறது.....
இன்னும்...
அன்னை இருக்கிறாள்
தந்தை இருக்கிறார்
அண்ணன் இருக்கிறான்
தங்கை இருக்கிறாளென.....

எண்ணம்
எதிர்க்கோணலாய்.....
இயற்கையெங்கும்
புதிர் காணலாய்......
வாழ்க்கை
மீண்டும் அனாதையாய்......
வழிப்பாதை
மீண்டுமோர் புதியபாதையாய்......
பயணம் தொடர்கிறது.......

பயணம் தொடர்கிறது,
பயணம் தொடர்கிறது.....
மாற்றம் மலர்கிறது
பயணிக்க பயணிக்க
மயக்கம் தெளிகிறது....

இன்றுணர்கிறேன்,

விடியல்
கனாக் கொள்வதில்லை
இயற்கை
வினாக் கொள்வதில்லை

விடியல்நோக்கி விரைகிறேன் மிதிவண்டியில்,
முடிந்த இவ்வுலகப்போரின்
முடிவெல்லையிலிருந்து.........


குறிப்பு:
இரண்டாம் உலகப்போரின் முடிவுப்பகுதியில், Berlin மாநகரம் தகர்க்கப்பட்டு, அனைத்தும் முடிவடைகிறது. கடைசியில் ஒரு சாதாரண Germany பெண், அழுத்தம் நிறைந்த மனதுடன் மிதிவண்டியில் Berlin-ஐ விட்டு, பிறந்த நாட்டைவிட்டு வெளியேறுகிறாள்.......
(மேலுள்ள படைப்பு, அக்கணம் அவள் மனம் எவ்வாறு இருந்திருக்க வாய்ப்புள்ளதென எண்ணி, யதார்த்தம் கலந்து எழுதியது)

எழுதியவர் : A பிரேம் குமார் (18-Jul-12, 1:52 am)
பார்வை : 672

மேலே