மறந்துவிட்டாயே அம்மா!
• அம்மா...
• எதற்கோ பயந்து
• என்னை அழிக்க முன் வந்தாய்!
• தாய்ப் பால்
• தரவேண்டிய நீ..
தரச் சொன்னது.. எருக்கம் பால்..
• கள்ளிப் பால்..
• அன்று..,
• கம்சனாய் நீ நின்ற போதும்..
• கண்ணனாய் காத்து நிற்கின்றேன்!
• பெண் என்பவள்
• அழிவதற்கோ..
• அழிபடவோ...
• வந்தவள் அல்ல!
• அவள் ஆக்கத்தின் சக்தி!
வாழ்க்கை என்றாலே போராட்டம்தான்!
புலிகளும்..நரிகளும்..
உலவும் பூமியில்தான்
பொன் மான்களும் உலவுகிறது?
பூமியில் போராடாத உயிர்கள் எது?
பெண்ணாய் பிறந்திருந்தும்
அன்று நீ மறந்துவிட்டாயே அம்மா!