அழகானவை!!!
பிறந்த குழந்தையின் அழுகை!
வளரும் மழலையின் சிரிப்பு!
மலர்ந்த மங்கையின் முகம்!
நன்றி மறவா அகம்!
இளமை கொள்ளும் காதல்!
வெய்யிலில் தூறும் சாரல்!
நலினம் கொண்ட பெண்மை!
வானம் கொண்ட தூய்மை!
மாலைப் பொழுதின் மயக்கம்!
அயல்நாட்டினர் சொல்லும் வணக்கம்!
ஆனந்தம் சிந்தும் கண்ணீர் !
ஆணவம் அறியா பெண்டிர்!
அன்பை மறைத்து வைக்கும் தந்தை!
அழகை மட்டும் காணா கண்கள்!
மாணவன் சொல்லும் பொய்கள்!
ஓயாமல் ஓடி வரும் அலைகள்!
கவிஞனின் முதல் கவிதை!
காதலியின் முதல் முத்தம்!
கடற்கரை மணலின் ஈரம்!
தாய் பிள்ளையை சுமக்கும் பாரம்!
இன்னும் இருக்கிறது அழகாய்
நீங்கள் நேசித்த ஒவ்வொன்றும்!!!