எங்களின் நிலை

தாலி அடகு வைத்த
காசுதான்

உழுத புழுதிக்கும்
உரத்துக்கும்

தொழி வேலைக்கும்
மொழி தேவைக்கும்

எத்தனையோ பிறப்பிற்கும் இறப்பிற்கும்

தாலி அடகு வைத்த
காசுதான்
பசு ஓன்று வாங்கிவந்தோம்
கட்டி வைக்க கயறும் வாங்கினோம்
அதே காசுதான்

அந்த நிலைதான்
ஆட்டுக்குட்டிக்கும்

கடன் என்றால் கையும் காலும் காலியாகும்
கல்யாணம் என்றால் வந்து போகும்

வந்து வந்து போகும்
எத்தனை முறையோ மீட்டு வந்தேன்

இப்படி வசதியா வாழ்ந்து வந்தோம்

ஒரு நாள்
தாயேய் அது நீ இறந்து அன்று
அறுத்து கட்ட அது வேண்டும்
ரசீது எடுத்து தாம்மா
மீட்டு வந்துடுறேன்

இட்ட தீயோட அது போனதுவோ
இன்னும் வந்து சேரலையே


இப்படிக்கு
நாகராஜன் சமுத்திரம்
ரெட்டைகுளம்
வீரகேரளம் புதூர் தாலுக்கா
திருநெல்வேலி மாவட்டம்

எழுதியவர் : நாகராஜன் சமுத்திரம் (28-Jul-12, 5:56 pm)
சேர்த்தது : S.Nagarajan
பார்வை : 178

மேலே