ஒரு துளி வான்....

வான் இடிந்து விழுகிறது
ஒரு துளியாக....

மயங்கியிருந்த பூமி
கண் விழிக்கத் துவங்குகிறது.....
பாவம் அதன் மயக்கம் பசியாலாம்...

ஒரு துளி பெருகுது
பல துளியாக....

மண் விருந்திற்கு தயார் ஆனது.....
இடியில் ஆரம்பித்த விருந்து
மின்னல் வெளிச்சத்தில் நடக்கிறது.....

முதல் பந்தியில் மண் மட்டுமே......
ஆடம்பர விருந்து – ஆலங்கட்டிகளுடன்......

மூக்கடைக்க திண்ற மண்
முங்கூட்டியே சேர்த்தது
தன் எதிர்கால சாப்பாட்டையும்....

தான் தணிந்த போது
தன்னை நம்பியவர்களுக்கும்
தாராளமாய் அளித்தது மண்.....

தனக்கு தந்ததை
தயங்காமல் சேமித்தன
தஞ்சம் அடைந்தவை.......

வான் தந்த விருந்தில்
உடல் பெருத்து
நிறம் பெற்றது மண்....

மண் பெற்ற நிறத்தால்
உரம் பெற்றன தஞ்சவாசிகள்.....

மகிழ்ச்சியில் திளைக்கிறது
மறுவாழ்வு பெற்ற மண்.....

கைமாறு செய்ய கருதுகிறது மண்.....
புறப்பட்டது மண்ணின் மாதிரிப் பட்டாளம்.....
தஞ்சவாசிகளின் வாயு வாகனமேறி......

வானுக்கு பறக்கிறது மாதிரிப்பட்டாளம்.....
மண் கண்ட வான் மேகக் கதவு திறந்து
வரவேற்கிறது வருக! வருகவென!!....

விண் சென்ற பட்டாளம்
வியந்து வினவியது....
நீரென்று இங்கேதும் இல்லை
எப்படி நீவிர் அளித்தீர்
அப்படியொறு விருந்தை....?

உடலில் ஓடும் குறுதி
வெளியில் தெரியாது என்று....

பகீரிட்ட பட்டாளம்
அதிர்ந்து வினவியது,
உம் குறுதியிலா விருந்துண்டோம்?.....

நீங்கள் குறுதியை உண்ணவில்லை....
குறுதியால் உண்டீர்கள்.......
குறுதியாலா எப்படி?

உங்களுக்கொன்று தெரியுமா......
நீவிர் வந்த வாகனமே
என் குறுதியால் ஆனது.....

குறுதியால் ஆனதா?
குழப்பாதீர்கள்.....
விருந்தெப்படி தந்தீர்கள்?....

உதிரத்தை உரு மாற்றும்
பசுவின் சூத்திரம்....
காற்றில் குறுதிகானும்
வானின் வரம்....
நீரகமும், பிராணகமும்
இணைந்தெடுக்கும் திரவத்தில் தான் அது.....

உங்கள் உதிரத்தால்
உணவளிப்பதன் காரணம்?.....

பிள்ளைக்கு தாய் ஊட்டாமல்
யார் ஊட்டுவது?.....

தாயா?! எப்படி?!.....

உந்தையின் உக்கிரத்தால்
உதிந்தவன் நீ.....

எந்தை யார்?....
கதிரவன்......

அவரின் அடையாளம் ஏதும்
என்னில் இல்லாது போனதெப்படி?

உந்தையின் உக்கிரம்
உன்னிடமும் இருந்தது...
நான் கொடுத்த மழையால்
மறைந்து போனது பற்பல அடையாளம்....

பற்பல அழிந்ததுயென்றால்
சிற்சில என்னில் உண்டா?....

உண்டு... அவ்வப்போது
வெடிக்கும் எரிமலைகளே அவை....!

சரி தாயே... பசிக்கு உணவளிக்காமல்
உடல் மயக்கத்தி அளித்ததேனோ?.....

நீ மயக்கத்தில் இல்லை மண் மைந்தா....
போதையில் இருந்தாய்...
நாளும் ஏறும் விஷ போதை.....

போதையா? நானா???....

ஆமாம்... பல வித போதை.....

உதாரணம் தர இயலுமா?

ம்..... புகை......

அப் பழக்கம் எனக்கில்லை...
பழக்கம் உனக்கிருக்க தேவையில்லை.....
உன் வாசிகளுக்கு இருப்பதே போதும்.....

என் வாசிகளா?
யார் யார் அவர்கள்.....?

ஆறறிவு வாசிகள் அவர்கள்...
தன்னறிவால் வந்தவைகளுக்கும்
புகைக்க பழக்கியவர்கள்....

யான் எப்படி அவர்களைத் திருத்த?

உன்னால் இயலாது.....

பின்னெப்படி திருத்த...?

இரண்டு வழி உண்டு...
ஒன்று அவர்களாய் திருந்துவது....
இரண்டு நான் திருத்துவது....

நீங்கள் எப்படி திரித்துவீர்கள்?
ஆயுதம் கொண்டு அராஜக முறையிலா?

இல்லை...... இல்லை....
ஆயுதம் கொண்டு தாக்கப் போவதில்லை
ஆயுதத்தை தக்க வைக்கப் போகிறேன்....

அப்படி என்ன ஆயுதம்?.!.?....

“மழை”........

எழுதியவர் : ஆதவன் (29-Jul-12, 1:32 am)
சேர்த்தது : ADHAVAN
Tanglish : oru thuli vaan
பார்வை : 154

சிறந்த கவிதைகள்

மேலே