புதிதாய் ஓர் உணர்வு

புதிதாய் பிறந்தாற்போல்
உள்ளுக்குள் ஓர் உணர்வு
இது உண்மையல்ல
பலர் சொல்லும் பொய் - ஆனால்
நான்.,
பாறைகளில் மோதி
முத்தமிட்டு சிதறிவிழும்
அருவியாய் ஓடிவருகிறேன்
உன்னை கண்டு,
உறங்குகிறது உலகம்.,
உறக்கமில்லை என் கண்களில்
உன்னை கண்டபின்.,
புதிதாய் படைத்த உலகத்தில்
நான் மட்டும்
தனியாய் தவிக்கிறேன்

எழுதியவர் : சிவகுமார் ஏ (29-Jul-12, 11:15 am)
சேர்த்தது : சிவகுமார் ஏ
பார்வை : 145

மேலே