ஈழவனும் மீனவனும் (இறுதிஊர்வலம் இல்லாத மரணம்)
கொடுமையாய்...
கொடூரமாய்..!
கொட்டாங்குச்சியாய்...
கோழிமுட்டையாய்.!
கேலிமட்டையாய்...
கோவனக்குட்டையாய்
வாழ்கிறோம்...
இலங்கை வெற்பிலே
ஈழக் கரியாய்...
ஊனக் கறியாய்...
ஈன நாட்டிலே
ஈ மொய்த்து,
ஊழக்கறியாய் வாழ்கிறோம்...
நடுக்கடல் தெய்வங்களை நம்பி
நாங்கள்
வாழ்கிறோம்!
நடு இரவில்
நய வஞ்சகனாய்...
நாத்திகனாய்...
நரியின் ஊழையாய்...
உடுக்கை வேடனாய்...
அலைகளின் ஆவியாய்...
சூரியனையும் விட்டு
நாயாய் வாழ்கிறோம்!
விரியனின் கடித்த
விஷமாய்...
விக்கிச்சாகும்
அனாதையாய்...
சாமத்தில்
ஈமமாய்...
ஈமத்தில்
சாமமாய் வாழ்கிறோம்
பட்டினிக் கிடக்கும்
பிள்ளைகளை விட்டுப்
பரதேசியாய்....
பாமரனாய்.....
படகுக்கணையில்
பாடையாய்
வாழ்கிறோம்...
உப்புக்கரையிலே உப்பளமாய்....
கடலில் வறுத்த அப்பளமாய்...
வங்கமுனையிலே
உயிர்ப்பிணமாய்
வாழ்கிறோம்....
அக்கரைச்சீமையிலே
அரைக்கைதியாய்....
அரைஞாண் அறுந்த
அம்மணமாய்...
மண்டலச்செய்திகளிலே
சிறைக்கைதியாய்
வாழ்கிறோம்...
விடியும் முன்னே
எல்லை முடிவாய்....
விடிந்த பின்னே
இறுதி முடிவாய்...
திரும்பும் முன்னே
வெருவாயோ
திரும்பினால் தான்
வருவாயோவென
வாழ்கிறோம்....
இறுதி நொடி
நடுக்கமாய்...
நடுக்கத்தில்
இறுக்கமாய்...
இறுக்கத்தில்
அழுத்தமாய்...
அழுத்தத்தில் நினைவாய்....
அன்னையாய்...
மனைவிமக்களாய்...
இரத்தத்தின்
மயானமாய்
வாழ்கிறோம்...
துப்பாக்கித் துரோகிகளாய்....
தோட்டாவின்
அகதிகளாய்
தூங்காதத் துறவிகளாய்
வாழ்கிறோம்....
செங்கள் சூளையில்
மர விறகுகளாய்...
கடல் சூளையில்
மனித விறகுகளாய்
வாழ்கிறோம்....
நிலத்தில் எரியும்
தீயாய்...
நீரில்,
எரியும் பனியாய்...
பயத்தில் எரியும் பேயாய்
வாழ்கிறோம்...
பேசத்தெரியாத
பிம்பக்கொடியாய்....
சுதந்திரமென்னும்
சாட்சிக்கொடியாய்...
முப்பொருளுரைக்கும்
மூவர்ணக்கொடியாய்...
இரத்தவாடையின்
எடை சுமக்கும்
தேசிய உடையாய்...
நீயோ
என்தேசியக்கொடியா?
சிங்களச்சீமானின்
சிறுமையிலே
சிக்கித்தவிக்கிறதே
ஈழத்தேசமும்
மீனவதேசமும்....
வீழ்ந்த நாள் இதுவே
மீளும் நாள்
இனியும் எதுவோ!...
அறுபது
ஆண்டுகாலமும்
ஆறு நிமிடந்தான்
ஆகிறதோ....
அதனால்தான் இன்னும்
வெடிகுண்டுகளின்
அனல் ஆறாமல்
அலைகிறதோ!...
கருவூற்றுக்கன்னியாம்
பாரத மாதா.!
அவளும்
கபடநாடக
மாடுகிறாளோ...
கண்களைப் பிடுங்கி
விட்டதால்
அவளும் காட்சியின்றி
துடிக்கிறாளோ!...
மத்திய மன்னர்களெல்லாம்
சேர்ந்துகொண்டு
முல்லிவாய்க்காலிலே
மூட்டைப் பூச்சிகளை
அள்ளிக்
கொடுத்துத்தானே
ஆவியைப்
பறித்தார்கள்...
அதற்க்கு
ஆதி முதல்வன் தானே
இந்த இராஜபக்சே!
முதலை முட்டைக்குள்
கண்ணீர் வடித்து
யாரை வணங்குகிறான்
இந்த இராஜபக்சே!
அதர்மத்தை அழிப்பதாய் நினைத்து
தர்மத்தை அழித்த பின்
யாரை வணங்குகிறான்
இந்த இராஜபக்சே!...
கூன் விழுந்த
குருட்டுக்கிழவன் போல்
கூனக்கும்பிடு போடும்
குள்ளநரிக்கள்ளனாய்
யாரை வணங்குகிறான்
இந்த இராஜபக்சே!
அள்ளி எடுத்து
கரைத்து குடித்து
எரித்து முடித்து விட்டானே!
முண்டன்....
இனியும்
நானெல்லாம்
இருந்தால் என்ன...
இல்லாமல் போனால் என்ன...
வேடிக்கை பார்த்துவிட்ட வெள்ளை மனிதரெல்லாம்,
இனி
டெசோ என்றாலும்
புண்ணியம் இல்லை...
சோடா என்றாலும்
புண்ணியமில்லை...
(plz ur comments)