ஒரு கவிஞனுக்கு கோபம் வந்தால்!!!
அமைதி என்ற ஒன்றை
அதிகம் நேசித்து அவன் சிந்தனையை
அழகாய் கவிதை வடிக்கும்
கவிஞனுக்கு கோபம் வந்தால்
காகிதம் கஷ்டப்படும்
பேனாவின் தாக்குதலால்!
எழுத்துக்கள் பயந்தோடும்
இவன் எண்ணத்தில் சிக்க பயந்து!
நீல வானம் நிறம் மாறும்
வண்ணத்தை எல்லாம் இவன் எடுக்க!
வார்த்தைகள் எல்லாம் வழிதேடும்
இவன் கவிதை காட்டினில் சிக்கிக்கொண்டு!
அமைதி என்ற வார்த்தைக் கூட
அகிம்சை இழந்திடும் இவன் உச்சரிக்க
சினம் கொண்டு கத்தியை
தீட்ட இவன் ஒன்றும் முரடன் இல்லை..
கவிஞனாக இருப்பதால் மெருகேர
தீட்டிக் கொண்டிருக்கிறான் புத்தியை,
அவன் கவிதை இன்னும் அழகு பெறவும்...
அதை படித்தே அவன் கோபம் தணியவும்!!!