தேடி காண்பாய்?

உண்மை தேடி
உலகில் புகுந்தேன்!
சூன்யம் ஒன்றே
சூழ்ந்திடக் கண்டேன்!

அன்பைத் தேடி
அனைத்திலும் வந்தேன்!
துன்பம் மட்டுமே துணையாய் கொண்டேன்!

மனிதம் தேடி
மயங்கி நின்றேன்!
மயக்கம் தவிர மற்றவை இல்லை!

ஆசை நெருப்பில்
அன்பு கருக..
சுயநலம் மட்டும்
ஓங்கி வளர..
மனிதம் தொலைத்த மனிதர்கள் நிறைய..
எங்கும்
பஞ்சம் ...வஞ்சம் ..லஞ்சம்..
நெஞ்சம் நிறைத்த செய்தியாய் இருக்க..
கோபம் கொண்ட மனிதனாய்..
நிலை கண்ணாடி முன் நின்றேன்!
என்னை பார்த்து..
சிரித்தது பிம்பம்!
சொன்னது ஓன்று
.உரைகல் ஏந்தி
உலகை சுற்றி..
கோப நெருப்பை உமிழும் மனிதா..
உலகில் தேடும்
அத்தனை செய்திகளையும்
உன்னில் எப்போது தேடி காண்பாய்?

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி ந (31-Jul-12, 2:27 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 199

மேலே