தொலைந்து போன உன் முகம்
முகம் தெரியா
இரவில்
தொலைந்து போன
உன் முகம்
தேடி தேடி
தோற்ற பின்
இமை மூடி
இரவை அணைக்கையில்
கனவென்னும்
கண்களுக்குள்
சில நிமிடம்
நீ வந்து போக
இழுத்து போர்த்தி
கொண்டு இமைகள்
இன்னும்
சில நிமிடம் கேட்டது
பகலையும் இரவாக்க சொன்னது
போர்வை கலையாமல்
கைகள் நீட்டி
அணைத்து வைத்தேன்
ஆறு மணி அலாரத்தை...