சொல்லின் வலிமை
மறுக்கமுடியாத
உன்
வார்த்தை வீச்சில்
மௌனத்தை
சுமக்கும்
என் மனமுதிர்வு
திக்குகள் அற்றது.
எளிதில் நகராத
சோகத்தின்
பெருங்கூட்டம்
எப்போதும் மோதுகிறது.
வலிமைகுறையாத
எதார்த்தத்தின்
அடர்த்தி
எங்கும் வூறிப்பரவுகிறது.
முகிழ்க்கிற
அர்த்தமற்ற
பார்வையின் வூடே
சிலாகிக்கிறது
சில ஒளியின் தேடல்...
எப்போதும்போலே
வெள்ளம் உணராத
அசட்டுத்தன்மையில்
உன்னையே வெறிக்கிறது
என் உள்ளம் .
உன் வலிமைமிகுந்த
வார்த்தையே
என்னை
உருகும் வெளிக்கு
நகர்த்தியது.
சொல்லால்
மெல்ல என்னுள்
வந்த
காதல் புயலில்
அனையுடையாத
வெள்ளத்தின் போக்கே
என்னுள் இன்னும்
பெருஞ்சுழலாய்
உருவெடுத்திருக்கிறது.