ஆயுள் கைதியொருவனின் புலம்பல்...!

துகிலுரியப்பட்ட
வாழ்க்கையும்
தூசனமாய்
எதிர்காலமும்
இருக்கும் போது
தூக்குமேடைக்கூட
துச்சமாய் தெரிகிறது...!

தாலியோடு
விதவையாக
மனைவி
தனிமையில்
வாடுகிறாள் !!!

திருந்தி வாழ
மறு ஜென்மம்
தீர்ப்பாக கிடைக்க
திக்கற்ற நாதியாக – நான்
ஆயுள் கைதியாய்
வாழுகின்றேன்...!!!

எழுதியவர் : கே . எஸ் .கலை (31-Jul-12, 10:54 pm)
பார்வை : 342

மேலே