இன்றைய கல்வி !
![](https://eluthu.com/images/loading.gif)
மூளையின்
முதுகுத் தண்டை
தகனம் செய்துவிட்டு,
வெறுமனே மனனம்
செய்ய கற்றுத்தரும்
பள்ளிகளுக்குள்தான்
நாம் பயணிக்கிறோம் !
மூளைக்கு பலம்
சேர்க்க வந்த - பால்குடி
மறவா பிஞ்சுகளையும்,
பளு தூக்கியாக்கும்
பள்ளிகூடங்களே அதிகம் !
பயிற்றுவிக்காமல்
பயிற்சியை விற்கும்
இக்கல்வித்தந்தைகள்,
செய்யும் பலதொழில்களுள்
ஒன்றாகி ஒன்றிப் போகிறது
பள்ளிக் கூடாரமும் !
மாணாக்கனை
சிந்திக்க செய்யும்
வழிகள் தவிர்த்து,
மனப்பாடம் செய்யச்சொல்லி
விழிகளில் கண்ணீர்
சிந்தச் செய்யும் - வலிகள்
தருவிக்கும் வழிகள் நமது !
கல்விமுறை
மாற்றப்படாவிடில்,
சொன்னது சொல்லும்
செய்வதை செய்யும்
மனிதனை உருவாக்கும்
தொழிற்சாளையாகவே
பள்ளிக்கூடங்களின்
பயணம் தொடரும் !
திறந்துவிட மறந்து
முடுக்கிவிட மறுத்து,
மூளையை மழுங்கடிக்கும்
கல்விமுறை கழற்றி எறிவோம் !
மேற்க்கத்திய
மெக்'காலே' வேண்டாம் !
நம் 'கை'யை ஊன்றி
உண்டு செரிப்போம்
நமக்கான கல்வியை !
எங்களை என்ன படிக்கிறோம்
என சிந்திக்கவையுங்கள் !
ஏன் படிக்கிறோம்
என வேண்டாமே !
வரப்பு கட்டிய
வாய்க்காலாய் இல்லாமல்,
அதிர்ந்து ஓடும் காட்டாறாய்
சிந்திக்க விடுங்கள் - நாடு நலம் பெற
கொஞ்சம் சிந்தித்து விடுங்கள் !
- வினோதன்