துணைவன்

நண்பனை விட..
எதிரியை விட..
மனைவியை
மக்களை விட..
நம் வீட்டு நாய் குட்டி,
பூனை குட்டியை விட..
24 மணி நேரமும்
அருகிலிருந்து……………….
சில நேரங்களில்
இன்பத்தையும்,
பல நேரங்களில்
துன்பத்தையும்.
இரவு தூக்கத்தையும்,
பகல் நேர ஆக்கத்தையும்
கெடுத்து,
உருவாக்கி
சில நேரம் எரிச்சலூட்டி
சில நேரம் பாசங்காட்டி.
ஒரு இனம்புரியா
நணபனா…..
பகைவனா…

இந்த
செல்பேசி……..


மஹாதேவன்

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (3-Aug-12, 7:05 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 211

மேலே