மணல் வீடு
குழந்தையாய் நான் மாறி ,
கைகளை மட்டுமே ஆயுதமாக்கி
கட்டிய மணல் வீட்டின் வேலை முடிந்த நேரம் ,
என் மனதில் மகிழ்ச்சி கரைபுரண்டோடி முடியும்முன்னே ,
'மழையின் ' அகோரதுளிகளால்'
கரைந்து போனதே என் அழகிய மணல் வீடு!
சுயமாய் நிலம் வாங்கி ,
வங்கியில் கடன் பெற்று,
நிஜத்தில்தான் ஒரு வீடு கட்ட முடியவில்லை!
இப்படியுமா?
'என்ன கொடுமை சார் இது?