என் தாய்
பத்து மாதம் சுமந்து உயிர் கொடுத்தாய் !
பத்தியம் தவறாமல் காப்பு சுவர் எடுத்தாய் !
பச்சிளம் பூ எனக்கு சூடு கொடுத்தாய் !
பாசத்தில் நூறு தாய்க்கு ஈடு கொடுத்தாய் !
பிள்ளை கண்ணீர் கண்டு துடிதுடிதாய் !
பசி கண்டவுடன் உன் குருதி தேன் கொடுத்தாய் !
பார்வைதூரத்தில் நடமாட வைத்து களித்தாய் !
பதரிபிஞ்சு பற்றுகையில் சொர்கமென அணைத்தாய் !
பள்ளி செல்ல மறுக்கையில் என் பாசாங்கில் பூரிதாய் !
படிப்பில் துவள்கையில் அன்பினால் கோபித்தாய் !
பார்த்து பார்த்து சமைத்த பின்னும் தட்டில் சாதம் மீறும் போது தன்னையே திட்டிக்கொண்டு
ஆயத்தம் ஆவாள் மறுநாள் சமையலுக்கு !
பக்கத்துக்கு வீட்டில் காய்ச்சல் என்றால்
மாத்திரையுடன் அடம்கொண்ட உணவு !
படுக்கை போனவுடன் அனிச்சையாய் உன் கை கம்பளத்துடன் போர்த்தவரும் !
பாதி தூக்கத்தில் எழுந்து பார்க்கும் போடும்
உன் கை என் மேல் தட்டியபடி !
வெளியில் சென்றால் பத்திரம் பத்திரம் என்னும் நூறு வழியனுபுதல்கள் !
வீடு திரும்பும் வரை பத்து கைபேசி அழைப்புகள் !
அம்மா !
என்றும் உன் சிரிப்புக்கு நான்
கோமாளி !
உன் அனுதாபத்திற்கு நான் ஏமாளி !
நீ துடிக்க நான் இதயம் !
நீதூங்க நான் தாய் !
உன் துக்கம் !
என் அஸ்தமனம் !