தமிழா.. தமிழ் பேசு..!!
என்னடா கொடுமை இது...!
தமிழை பேசென்று
தமிழனிடம் கெஞ்சுவதோ..?
தேன் சொட்டும் தமிழை,
தேள் கொட்டுவதை போல்.. - பிறமொழிகள், தலையில் தான் கொட்டுவதோ..?
" யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழிபோல் எங்கும் காணோம்..! "
- என்றான் கவிஞன்..!!
இன்றோ படித்தோர் பாசறையில்
இலக்கணத்தோடு தமிழை பேசினால்..
ஏளனம் செய்யுதே கூட்டம்..!
தமிழ் இனி மெல்ல சாகும் - என
புத்தகத்தில் படித்ததுண்டு..,
தமிழா..! நீ அதனை தவறாய்
மென்று சாகடிக்கலாமா ..?
வழியென்று கேட்டால்,
லெப்ட் என்றாய், ரைட் என்றாய்...
நுனி நாக்கில் ஆங்கிலம்,
ம்ம்.. அடுத்த மொழியில் பெருமிதம்...!!
சொந்த தாயை தவிக்கவிட்டு
மாற்றாந்தாய்க்கு மணிமகுடமோ...?
தமிழை வளர்க்க படை தேவையில்லையே...
தமிழா..!
தமிழனிடமாவது தமிழில் பேசு...!!!
தானாய் வளரும் எம் தாய் மொழி...!!!