தமிழரின் கணக்கதிகாரம்......
பலாச்சுளைக் கணக்கு - கணக்கதிகாரம்:-
ஒரு பலாப் பழத்தை அறுக்காமலே அதில் எத்தனை சுளை இருக்கிறது என்பதைக் கண்டறியும் வழி கொடுக்கப் பட்டுள்ளது.
"பலவின் சுளையறிய வேண்டிதிரேலாங்கு
சிறுமுள்ளுக்காம்பருக்கெண்ணி - யறுகாக
ஆறிற்பெருக்கியே யைந்தினுகீந்திடவே
வேறென்ன வேண்டாஞ்ச்சுளை"
அதாவது பலாப்பழத்தின் காம்பைச் சுற்றயுள்ள முற்களை எண்ணி அதனை ஆறால் பெருக்கினால் வரும் விடையை ஐந்தால் வகுத்தால் கிடைப்பது அந்த பலாவில் உள்ள எண்ணிக்கையாகும்.
உதாரணம்:
காம்பைச் சுற்றியுள்ள சிறு முள்ளின் எண்ணிக்கை 100 எனில் 100 x 6 = 600 600 /5 =120 பலாச்சுளைகளின் எண்ணிக்கை = 120 ஆகும். உங்களுக்கு பொறுமை இருந்தால் பலாபழாத்தின் மேல் உள்ள சிறு முள்ளுகளை எண்ணி கணக்கு போட்டு பாருங்களேன்.............
********************************************
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால்
கூற முடியுமா ?
ஒரு தமிழ் செய்யுளின் வரிகள்
கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசனிக்காய் தோறும் புகல்
ஒரு பூசனிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு , ஐந்து, இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "X" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90X" ஆகும்.
அதை பாதியாக்கினால் கிடைப்பது "45X" ஆகும்
அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135X" ஆகும்
ஒரு பூசனியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை X=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது 810 ஆகும் எனவே பூசனியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்
அடுத்த முறை பூசனி வாங்கும் போது சரிபாருங்கள்.
செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி, மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.