களவாடிய காலம்

முகத்தைச் சுழித்து
அருகே
அப்பாவின் அதட்டலுக்குப் பயந்தவாறே
வாய் நிறைய தண்ணீரை நிரப்பிக்
கண்களைச் சிக்கென மூடியபடி
தலையை உயர்த்தித்
தொண்டைக்குள் சரியாகப் போட்டு
விழுங்கியது போய்..
இயல்பாக வாயில் வைத்துத்
தண்ணீர் விட்டு
மாத்திரையை விழுங்கிவிடும்
தருணத்தில் உணர்கிறேன்
நான் வளர்ந்து விட்டதை..

எழுதியவர் : சுபத்ரா (8-Aug-12, 11:45 pm)
சேர்த்தது : சுபத்ரா
Tanglish : kalavadiya kaalam
பார்வை : 111

மேலே