ஆரஞ்சு நிற தாமரை இலைகள்......!
வட்டமாக வெட்டிய கேரட் துண்டுகள்
கொதிக்கும் சாம்பார் குளத்தில் மிதக்கும்
ஆரஞ்சு நிற தாமரை இலைகள்......!
ரசனைகளின் பரிணாமம் மாறுகையில்
எரிப்புகள் இனிமையாகிறது
ஏளனங்கள் புகழ்ச்சியாகிறது
எனது வாழ்க்கையே இலகுவாகிறது......!
கஷ்டங்கள் எங்கும் இல்லை
கனவுகளே வண்ணங்களாகிறது....!
கவிதைகள் துணை புரிகிறது
காலங்கள் இனிமையாகிறது....!