athisayam

பிரம்மாவின் கை தூரிகை
நான்
உன் புருவத்தை சொல்லுகிறேன்.
நறுக்கி வைத்த கோவைபழத் துண்டு
நான்
உன் செவ்வாயை சொல்லுகிறேன்.
கவிழ்த்து வைத்த இளநீர்
நான்
உன் கொங்கைகளைச் சொல்லுகிறேன்
ஆங்கில எழுத்து X-ன் அச்சு பிரதி
நான்
உன் இடையைச் சொல்லுகிறேன்
மடித்துவைத்த ரோஜாவின் இதழ்கள்
நான்
உன் அல்குலைச் சொல்லுகிறேன்
கை தேர்ந்த சிற்பிகள்
கடைந்தெடுத்த
தங்கத் தூண்கள்
நான்
உன் தொடைகளைச் சொல்லுகிறேன்
இருள்சூழ்ந்த கறுப்பு காடு
நான்
உன் கூந்தலைச் சொல்லுகிறேன்
இரவிலும் பிரகாசிக்கும் கண்ணாடி
நான்
உன் மேனியைச் சொல்லுகிறேன் .
மொத்தத்தில்-
நீ எல்லோரா சிற்பம்
என்னை
வாட்டி வதைக்கும் தட்பவெப்பம்.
சுசீந்திரன்