027 -- ஆவியிற் குளிப்போம் அவர்வழிச் சிறப்போம்!
பாவியாய்ப் பிறந்து பாவத்தைச் சுமந்து
..பரமனைச் சரணடைவோம் !
ஆவியிற் குளிப்போம்! அவர்வழி நடப்போம்!
..அதன்பலன் பகிர்ந்திடுவோம்!
ஆவலில் அவரை அடைந்தவர் பாவம்
... அழிந்திடக் கண்டிடுவோம் !
காவலில் அவரும் இருப்பதை நம்பிக்
...கவலைகள் போக்கிடுவோம்!
துப்புர வாகித் தூய்மையை நெஞ்சில்
...தூக்கியே நடந்திடுவோம்!
ஒப்புர வாக்கி உடன் நடக்கின்ற
...ஒருவரை நாம் ,மறவோம்!
ஏவலை விடுத்தே ஏசுவும் ஊழியம்
...எடுத்ததை எண்ணிடுவோம் !
தேவனை நாங்கள் தெரிந்திடக் கிடைத்த
... திருப்தியைச் சொல்லிடுவோம்!
ஆவியில் அவரும் பிறந்ததை இன்றும்
...அதிகமாய் நம்பிடுவோம்!
சாவினை வென்றவர் சரித்திரம் தன்னை
...சகலர்க்கும் உணர்த்திடுவோம்!
ஒப்பனை இன்றி உண்மையில் நெஞ்சம்
...உடன்பட வேநடப்போம்!
அப்பனைக், குமாரனை, ஆவியைக் கொண்டே
...அவர்வழி யில்,சிறப்போம்!
-௦-௦-